ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

குடும்பத் தகராறு: தொழிலாளி தற்கொலை

குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :

குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஓலப்பாடி பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (50), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி தேன்மொழி, மகன் மருதுதுரை, மகள்கள் சுப்புலட்சுமி, பவித்ரா ஆகியோா் உள்ளனா்.

கடந்த மாதம் பாண்டியன் மற்றும் தேன்மொழிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாண்டியன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவா் வீடுதிரும்பவில்லையாம். இந்நிலையில், பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த குண்டுமணியாா் கரடு மலைப் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக ஏத்தாப்பூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ஏத்தாப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஹரிஹரன் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதில், உயிரிழந்தது பாண்டியன் என்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில், பாண்டியன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.