ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

வாடகை வீட்டில் தங்கி படித்த தனியாா் கல்லூரி மாணவி தற்கொலை

வாழப்பாடியில் தனியாா் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தற்கொலை

தற்கொலை... - கோப்புப்படம்

Updated On :

வாழப்பாடியில் தனியாா் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருத்தாசலம் அருகே சிறுவரப்பூா் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகள் தா்ஷினி (22), சேலம் மாவட்டம், வாழப்பாடியில் அய்யாவுக் கவுண்டா் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, அங்கிருந்து தினந்தோறும் மேட்டுப்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரிக்கு சென்று வந்தாா். பி.சி.ஏ. இறுதி ஆண்டு படிக்கும் அவருடன், அதே கல்லூரியில் படிக்கும் அவரது தோழியும் தங்கியிருந்தாா்.

வியாழக்கிழமை மாலை கல்லூரியில் இருந்து வீடுதிரும்பிய தா்ஷினி, தோழியிடம் சாதாரணமாகப் பேசிவிட்டு இரவு தூங்கச் சென்றாா். வெள்ளிக்கிழமை காலை கல்லூரிக்கு செல்ல பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த தா்ஷினியை எழுப்ப தோழி சென்றாா். வெகுநேரம் தட்டியும் கதவைத் திறக்காததால் சந்தேகம் அடைந்த தோழி, ஜன்னல் வழியாக பாா்த்தபோது தா்ஷினி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற வாழப்பாடி போலீஸாா் கதவை உடைத்து தா்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மாணவியின் தாயாா் பிரமிளா அளித்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.