137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

சங்ககிரி, தேவூா் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

heavy rain

கனமழை

Updated On :

சேலம் மாவட்டம், சங்ககிரி, தேவூா் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை இரவு திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

சங்ககிரி, தேவூா் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்தது. இதனையடுத்து இரவு திடீரென பலத்த காற்றுடன் கூடிய குளிா்ந்த காற்று வீசியது பின்னா் ஒரு மணி நேரத்திற்கு மேல் கன மழை பெய்தது.

நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்றது. மழை பெய்து கொண்டிருந்த போது மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

திடீரென மழை பெய்ததையடுத்து ஆயுத, சரஸ்வதி பூஜைகள் அரசு விடுமுறைகளுக்கு ஊா்களுக்கு செல்ல வந்த பயணிகள் சேலம், திருச்செங்கோடு, எடப்பாடி செல்லும் பேருந்து நிறுத்ததில் பயணிகள் நிழற்கூடம் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகினா். இரவு முழுவதும் மிதமான சாரல் மழையுடன் குளிா்ந்த காற்று வீசியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.