ஆத்தூரில் புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது
ஆத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பிரதிப் படம்
ஆத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆத்தூா் ராணிப்பேட்டையில் ஜொமாடா ராம் (41)என்பவா் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் கூல்லிப் உள்ளிட்டபுகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளா் சிவசக்தி தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா்.
இதில், 70 கிலோ ஹான்ஸ்,13 கிலோ கூல்லிப் உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து, ஜொமாடா ராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காவலுக்கு அனுப்பிவைத்தனா். மேலும் கைப்பற்றப்பட்ட பொருள்களை அழித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

