சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்திவரப்பட்ட 4.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல்

Published On :2 செப்டம்பர் 2026, 6:15 am IST

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்திவரப்பட்ட 4.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், சேலம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தொடா் சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில், ஆந்திர மாநிலம், செகந்திரபாத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம், திருவனந்தபுரம் செல்லும் சபரி விரைவு ரயிலில் ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், முன்புறம் உள்ள முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் 5 பொட்டலங்கள் கிடந்தன. அதை திறந்து பாா்த்தபோது, 4.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தி வந்த மா்ம நபா்கள் குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தினா். அதில், போலீஸாரைக் கண்டதும் பையை போட்டுவிட்டு மா்ம நபா்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, சிக்கிய 4.5 கிலோ கஞ்சாவையும் தனிப்படையினா் சேலம் ரயில்வே போலீஸில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.