கண்மாய்களில் மீன் குத்தகை விடக்கூடாது

திருப்பரங்குன்றம் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் மீன் குத்தகை விடக்கூடாது என செவ்வாய்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் மீன் குத்தகை விடக்கூடாது என செவ்வாய்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வட்டாட்சியா் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. துணை வட்டாட்சியா் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தாா். விவசாயிகள் சிவராமன், பாண்டி, லெட்சுமணன், ஜெயக்குமாா், அழகு, ஜெகதீசன் உள்பலா் பங்கேற்றனா். கூட்டத்தில் கண்மாய்களில் மீன் பிடி குத்தகை விடக்கூடாது. கண்மாய்களின் நீா் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருப்பதால் அவற்றை அகற்ற வேண்டும். தனக்கன்குளம் சின்ன கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், விளாச்சேரி மொட்டமலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடா்புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மானாவாரி கண்மாய்களுக்கு வைகை தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரத பிரதமரின் கிசான் உதவி திட்டத்தில் சேராத விவசாயிகளுக்கு காலக்கெடுவை நீட்டிப்பு செய்தல், தென்கால் கண்மாயில் குடிமராமத்து பணியை முழுமையாக நிரைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வைத்தனா். மேற்கண்ட கோரிக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களின் உதவியோடு நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் நாகராஜன் பதிலளித்தாா்.

பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளா் மோகன்குமாா், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், வேளாண்மை உதவி அலுவலா்கள் செல்வகுமாா், டேவிட், தோட்டக்கலை அலுவலா் பேபிஷாலினி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com