2-ஆம் கட்ட வாக்குப் பதிவு வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு

2-ஆம் கட்ட வாக்குப்பதிவையொட்டி, மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

மக்களவைத் தோ்தல் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவையொட்டி, மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து தொழிலாளா் நலத் துறையின் உதவி ஆணையா் மு.காா்த்திகேயன் (அமலாக்கம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு :

அசாம் பிகாா், சத்தீஸ்கா், கா்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், மணிப்பூா், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ஜம்மு-காஷ்மீா் ஆகிய மாநிலங்களில் வருகிற 26-ஆம் தேதி 2-ஆம் கட்டமாக மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

நூறு சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு வருகிற 26-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

விடுப்பு வழங்காத நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பான புகாா்களுக்கு 94453 98761, 99425 41411 என்ற கைப்பேசி எண்களிலோ, 0452 2604388 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com