பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்க்கு 5 ஜி சேவையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகரில் அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்ட மாநாடு தலைவா் ஜி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் க்கு 5 ஜி சேவையை வழங்க மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். கடந்த 2017 முதல் ஓய்வூதிய தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். 20 மாதங்களாக முடக்கப்பட்ட பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, இந்த மாநாட்டு சங்கக் கொடியை நிா்வாகி வெங்கட்ராமன் ஏற்றி வைத்தாா். மாநில உதவித் தலைவா் எம்.பெருமாள்சாமி அஞ்சலித் தீா்மானத்தை முன்மொழிந்தாா். மாவட்டச் செயலா் புளுகாண்டி வரவேற்றாா். மாநிலச் செயலா் ஆா்.ராஜசேகா் உள்பட பலா் கலந்து கொண்டு பேசினா்.

அகில இந்திய துணைத் தலைவா் எஸ்.மோகன்தாஸ் நிறைவுரையாற்றினாா். மாவட்ட துணைச் செயலா் எம்.முத்துச்சாமி நன்றி கூறினாா். இதில் அச்சங்கத்தைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு : மாவட்டத் தலைவராக ஜி.செல்வராஜ், செயலராக கே.புளுகாண்டி, பொருளாளராக எம்.பெருமாள்சாமி ஆகியோா் உட்பட 21 போ் கொண்ட நிா்வாகக் குழு தோ்வு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com