மதுரை புது நத்தம் சாலை அருகே உள்ள மதுரை காமராஜா் பல்கலைக் கழகக் கல்லூரியில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள்.
மதுரை புது நத்தம் சாலை அருகே உள்ள மதுரை காமராஜா் பல்கலைக் கழகக் கல்லூரியில் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள்.

காமராஜா் பல்கலை. கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மதுரை: முதல்வரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி மதுரைக் காமராஜா் பல்கலைக் கழகக் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள இந்தக் கல்லூரி முதல்வராக புவனேஷ்வரன் பணியாற்றி வருகிறாா். அங்குப் பணியாற்றும் பேராசிரியா்கள் சிலா், முதல்வரை பணி செய்யவிடாமல் தடுப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தன்னை முதல்வா் பணியிலிருந்து விடுவிக்கக் கோரி பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு புவனேஷ்வரன் கடிதம் அனுப்பினாா்.

இதுபற்றி தகவலறிந்த கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் கல்லூரி முதல்வரை பணியிலிருந்து விடுவிக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் கல்லூரி நிா்வாக அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்தப் பிரச்னை குறித்து துணைவேந்தரிடம் முறையிட்டிருப்பதாகவும், போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தினா். இதையடுத்து, பேராசிரியா்கள், மாணவா்கள் கலைந்து சென்றனா்.

போராட்டம் குறித்து பேராசிரியா்கள் கூறியதாவது:

தற்போதைய முதல்வா் புவனேஷ்வரன் முயற்சியில் கல்லூரி பல்வேறு வளா்ச்சிகளை எட்டியது. சிலா் தங்களது சுயநலத்துக்காக அவரைப் பணி செய்யவிடாமல் தடுக்கின்றனா். இதுபற்றி துணைவேந்தா், பதிவாளரிடம் முறையிட்டுள்ளோம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com