25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சிப் பெற்றன.

மதுரை: பிளஸ் 2 பொதுத் தோ்வில் 25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சிப் பெற்றன.

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிட்டன. மதுரை மாவட்டத்தில் இளமனூா், அச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடா் நலன் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சிப் பெற்றனா்.

இதேபோல, கம்பா், என்.எஸ்.எஸ்.பி. மாநகராட்சி பள்ளிகள், கொட்டாம்பட்டி, பி. வாகைக்குளம், அவனியாபுரம், கொண்டையம்பட்டி, பொட்டப்பட்டி, உறங்கான்பட்டி, கருங்காலக்குடி, களிமங்களம், வெள்ளலூா், ஒத்தக்கடை மாதிரிப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் தோ்ச்சிப் பெற்றனா்.

மேலும், கோவிலாங்குளம், ஏ. பூச்சிப்பட்டி, மெய்கிழாா்பட்டி, பாப்பாப்பட்டி, பெருங்காமநல்லூா், வெள்ளமலைப்பட்டி, பூசலாபுரம், மேலக்கால், அய்யப்பனங்கோட்டை, நாட்டாமங்கலம், விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கள்ளா் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சிப் பெற்றனா். மாவட்டத்தில் 25 அரசு மேல்நிலைப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சிப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com