சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

ஒட்டன்சத்திரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஒட்டன்சத்திரத்தில் புதன்கிழமை நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:58 am IST

ஒட்டன்சத்திரத்தில் புதன்கிழமை நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலையை மூடக் கோரியும், தேனி அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை தடுக்கக் கோரியும் நாம் தமிழர் கட்சி மற்றும் ஏறுமுனை இளைஞர் மன்றம் சார்பில் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் பிரிவு சாலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதற்கு நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். 
அவைத் தலைவர் அன்பழகன், ஏறுமுனை இளைஞர் மன்ற நிர்வாகி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பிரபாகரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.