பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் இரண்டு நாள் மூலிகைக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை கல்லூரி முதல்வர் அன்புச்செல்வி தொடக்கி வைத்தார். துறைத் தலைவர் ஆனந்தி வரவேற்றார். கண்காட்சியில் உப்புக்கொல்லி, சர்க்கரைக் கொல்லி, நாகமல்லி, கோபுரந்தாங்கி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, கேசவர்த்தினி, ஆகாசக்கருடன், கருங்குறிஞ்சி, நீர் மேல் நெருப்பு, திப்பிலி, வெற்றிலை, வெளளருகு, மருகு, மாசிப்பச்சை, கரு ஊமத்தை, கள்ளிமுளையான் போன்ற அரியவகைத் தாவரங்கள் உள்பட 180 வகையான மூலிகைத் தாவரங்களும், நவக்கிரகங்களுக்கான தாவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், கல்லூரி வளாகத்தில் வளர்க்கப்பட்டு வரும் 27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான தாவரங்களையும் பார்வையாளர்களுக்கு எடுத்துக் கூறினர்.
மூலிகைத் தாவரங்களின் மருத்துவப்பயன்கள் பற்றி கண்காட்சியில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் விளக்கப்பட்டது. மேலும் இக்கண்காட்சியில் மண்புழு மற்றும் இயற்கை உரம் தயாரித்தல், காளான் வளர்த்தல், பாட்டி வைத்திய மகத்துவம், தாவரங்களை இனம் கண்டறிதல், நாகரிகமயமாதலால் இயற்கைக்கு ஏற்படும் விளைவுகள் பற்றியும் கூறப்பட்டது.
இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காட்சியை பார்க்க வந்தவர்களுக்கு 35 வகையான விதைகள் கொண்ட பைகள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பேராசியர்கள் ரத்தினசாமி, மயில்சாமி, விக்னேஸ்வரன், ஜெயசித்ரா, சிபு, மேனகா, கண்ணதாசன், கார்த்திக்குமரன் மற்றும் துறை மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு போலீஸில் பெண் புகாா்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு! கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக, புதுச்சேரி மீனவா்கள்!

தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


