அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மேட்டுப்பட்டியில் பாஸ்கு திருவிழா

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாஸ்கு திருவிழாவில் உயிர்த்த ஏசுவின் ரத பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:27 am

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாஸ்கு திருவிழாவில் உயிர்த்த ஏசுவின் ரத பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை திருத்தலத்தில் 328ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தூம்பா ஊர்வலம் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, உதவிப் பங்குத்தந்தை சேசுதாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 
இந்நிலையில் உயிர்த்த ஆண்டவரின் ரத பவனி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முன்னதாக திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி நற்கருணை ஆசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து ரத பவனியை வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.