திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மதமாற்றம் செய்வதாகக் கூறி, கிறிஸ்தவ தேவாலயத்தை இந்து முன்னணியினர் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அஞ்சுகுழிப்பட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில், அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அஞ்சுகுழிப்பட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளை அங்கு அழைத்துச் சென்று, மதப் பிரசாரம் நடைபெறுவதாகவும், மத மாற்றம் நடைபெறுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த தேவாலயத்தை இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொதுச் செயலர் எஸ்.சங்கர் கணேஷ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற சாணார்பட்டி போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தேவாலயம் செயல்படுவதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், கோட்டாட்சியர் தலைமையிலான கூட்டத்தில் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க வாக்குப்பதிவு விறுவிறு! ரிக்ஷாவில் வந்து வாக்களித்த மஹுவா மொய்த்ரா!

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

குடியரசு துணைத் தலைவா் திருமலையில் வழிபாடு

இந்த நாள் யாருக்கு சாதகம்! தினப்பலன்கள்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

