கோவையை அடுத்த கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் பணியாற்றி வந்த காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், விளாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆர்.அமர்நாத் (25) . பிளஸ் 2 வரை படித்துள்ள இவர் 2016ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்துள்ளார். இதையடுத்து, 2017ஆம் ஆண்டு முதல் கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 4ஆம் அணியில் காவலராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அமர்நாத் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரையில் இருந்துள்ளார். அதன் பிறகு அவரைக் காணவில்லை. இதனிடையே காவல் படை வளாகத்தில் உள்ள மரத்தில் திங்கள்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அமர்நாத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது செல்லிடப்பேசி அழைப்புகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாதி குறித்து அவதூறு பேச்சு! பஞ்சாப் எஸ்சி ஆணையத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரிய மத்திய இணையமைச்சர்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

யார் இந்த பில்லிசூன்ய மருத்துவர்? ஹாரி கேனை கோல் அடிக்க விடாமல் தடுத்த கானாவின் மந்திரவாதி!

பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


