ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பழனியில் 16ஆம் நூற்றாண்டு செப்பேடு கண்டெடுப்பு: சிறை பிடிக்கப்பட்ட பெண்களை மீட்ட வரலாற்றை கூறுகிறது

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் பெண்களை சிறைபிடித்தது   விருதுநகர் பகுதியை ஆட்சி செய்த சங்குப்பிள்ளை,  மதுரையை ஆண்ட நாயக்க

Updated On :24 ஜூலை 2018, 1:00 am IST

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் பெண்களை சிறைபிடித்தது   விருதுநகர் பகுதியை ஆட்சி செய்த சங்குப்பிள்ளை,  மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் தளபதிகள் பற்றி குறிப்பிடும் செப்பேடு பழனியில் கண்டறியப்பட்டுள்ளது.
     பழனி பகுதியில் ஒருவர் வீட்டில் இருந்த செப்பேட்டை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி திங்கள்கிழமை கூறியது: 
   தற்போது கிடைத்துள்ள செப்பேடு 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த செப்பேடு இரண்டாக உடைந்துள்ளது. செப்பேடு முகப்பில் சூரிய, சந்திர வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 
  செப்பேடு இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு முதல் பகுதியில் 115 வரிகளும், இரண்டாவது பகுதியில் 60 வரிகளும் எழுதப்பட்டுள்ளன. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தற்போதுள்ள விருதுநகர் பகுதியை குறுநில மன்னர் போல ஆண்டு வந்த சங்குப்பிள்ளை என்பவருக்கு அப்பகுதி பொதுமக்கள் இந்த செப்பேட்டை எழுதித் தந்துள்ளனர்.  
  இதில் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் உள்ளன. 
  கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் தளபதியாக இருந்த அரியநாத முதலியார் பற்றி இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர் கி.பி.1551ஆம் ஆண்டு சங்குப்பிள்ளை ஆட்சியின்கீழ் இருந்த வடபட்டியை முற்றுகையிட்டு இரண்டு பெண்களையும், ரெண்டப்புளியை முற்றுகையிட்டு மூன்று பெண்களையும் சிறைபிடித்து மதுரைக்கு கொண்டு சென்றுள்ளார். இதற்கு ஒரு ஆண்டு முன்னதாக கி.பி.1550இல் மதுரை நாயக்க மன்னர்களின் மற்றொரு தளபதியான அண்ணாமலை நாயக்கர் மன்னார் கோட்டையை முற்றுகையிட்டு மூன்று பெண்களை சிறைபிடித்து மதுரைக்கு கொண்டு சென்றுள்ளார்.
 தனது பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊர் மானத்தை மீட்கவும், பெண்களின் மானத்தை காக்கவும் சங்குப்பிள்ளை தனது ஆள்களை அனுப்பி 880 பொற்காசுகள் கொடுத்து மீட்டு வந்துள்ளார்.  
   செப்பேட்டில் அந்த காலத்திலேயே பெண்களின் பெயர்களை குறிப்பிடாமல் இன்னார் மகள், இன்னார் சகோதரி என்றே குறிக்கப்பட்டுள்ளது. இந்த சிறைமீட்புக்கு நன்றிக் கடனாக ஊர்மக்கள் சேர்ந்து சோலையழகன் என்பவரை வைத்து செப்பேட்டை எழுதி சங்குப்பிள்ளைக்கு கொடுத்துள்ளனர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.