கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு ஏரியில் மீன் பிடிக்கும் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
மீன் வளத்துறை சார்பில் கொடைக்கானல் ஏரியில் நடைபெற்ற இப்போட்டி 18-வயதுக்குட்பட்டவர்களுக்கும், பெரியவர்களுக்கும் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியை மீன் வளத்துறை உதவி இயக்குநர் வேல்முருகன் தொடங்கி வைத்தார். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு இரண்டு மணி நேரம் வழங்கப்பட்டது. இதில் சிறியவர்கள் பிரிவில் கொடைக்கானலைச் சேர்ந்த சதீஷ்குமார் 225-கிராம் கென்டை மீனைப் பிடித்து முதல் பரிசும், மணிகண்டபிரபு 175-கிராம் சாதா கென்டை மீனை பிடித்து இரண்டாம் பரிசும், கரீம் என்பவர் சாதா கென்டை மீனை பிடித்து மூன்றாவது பரிசும் பெற்றனர்.
பெரியவர்கள் பிரிவில் அருமைநாயகம் என்பவர் 30-நிமிடத்தில் சுமார் 1.200 கிலோ எûயுள்ள கென்டை மீனை பிடித்து முதலிடம் பெற்றார். செல்வம் என்பவர் சுமார் ஒரு கிலோ எடையுள்ள சாதா கென்டை மீனை பிடித்து இரண்டாம் இடம் பிடித்தார்.
சௌந்தர் என்பவர் சுமார் 750 கிராம் எடையுள்ள சாதா கென்டை மீனை பிடித்து 3-ஆவது இடம் பிடித்தார்.
வெற்றி பெற்றவர்களுக்கு மீன் வளத்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் மீன் வள ஆய்வாளர் கவிதா, மீன்வளத்துறை மேற்பார்வையாளர்கள் மனோகரன், கார்த்திக், உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழை - 2 திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?

மணிப்பூர்: குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் உடல்கள் ஒப்படைப்பு

கடைசி டி20: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த நியூசிலாந்து!

ஈரான் போரால் ஏற்பட்ட பாதிப்பு: அமெரிக்காவின் பிரபல விமான நிறுவனம் மூடல்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

