மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

திண்டுக்கல் அருகே  புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது

திண்டுக்கல் அருகே ரூ.50ஆயிரம் மதிப்பிலான  புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ள  போலீஸார், இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :8 அக்டோபர் 2018, 7:41 am IST

திண்டுக்கல் அருகே ரூ.50ஆயிரம் மதிப்பிலான  புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ள  போலீஸார், இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
 திண்டுக்கல் பழனி புறவழிச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(65). அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, பழனியைச் சேர்ந்த கோபால்(62) என்பவர், தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு  கொடுத்து வந்துள்ளார். 
இதுகுறித்து  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  தனிப்படை போலீஸாருக்கு தகவல்  கிடைத்தது. அதன்பேரில், ஞாயிற்றுக்கிழமை மாலை பழனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு இரு கக்கர வாகனத்தில் வந்த கோபாலை வழிமறித்து சோதனையிட்டனர்.  அப்போது 4 மூட்டைகளில் கோபால் கொண்டு வந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.  அதன் மதிப்பு சுமார் ரூ.50ஆயிரம் . 
இதையடுத்து கோபால்  மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார்  கைது செய்து,  தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தாலுகா போலீஸார்  விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.