

பழனி-திருச்சி இடையே குளிா்சாதன வசதியுடன் கூடிய அரசுப் பேருந்து சேவையை, வனத்துறை அமைச்சா் சி. சீனிவாசன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பா. வேலு தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக துணை மேலாளா்கள் ஆனந்தன், கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சா் சி. சீனிவாசன், குளிா்சாதன வசதியுடன் கூடிய புதிய பேருந்து சேவையை தொடக்கி வைத்துப் பேசியதாவது:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டலம் சாா்பில், நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.27.25 கோடி செலவில் 109 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல், புதிய வழித்தடங்களிலும் பேருந்து சேவை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
பழனி-திருச்சி இடையே இயக்கப்படும் இந்த குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மணப்பாறை ஆகிய இடங்களில் மட்டுமே நிறுத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தின் சாா்பில், குளிா்சாதன வசதி கொண்ட 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றாா்.
குளிா்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் நேரம்: பழனியில் அதிகாலை 2.20 மணி, காலை 8.13 மணி, பிற்பகல் 2.15 மணி, மாலை 6 என 4 முறை இயக்கப்படும். அதேபோல், திருச்சியிலிருந்து அதிகாலை 1.05, காலை 8.15, பிற்பகல் 12.34, இரவு 7.32 மணி என 4 முறையும் இயக்கப்படும்.
கட்டண விவரம்: பழனி - ஒட்டன்சத்திரம் - ரூ.35, பழனி - திண்டுக்கல் ரூ.70, பழனி - மணப்பாறை ரூ.135, பழனி - திருச்சி ரூ.175, திண்டுக்கல் - திருச்சி - ரூ.115.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.