கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் புதன்கிழமை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் கொடைக்கானல் மற்றும் மேல்மலைப் பகுதிகளில் தண்ணீர் பிரச்னை நிலவி வருகிறது. விவசாயமும் பெரிதும் பாதிப்படைந்தது. இந் நிலையில் கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும், இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் இருந்து வருகிறது. இதனால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் திடீரென காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த இரு தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தும், மாலை நேரங்களில் குளுமையான காற்றும் வீசியது. இதைத் தொடர்ந்து கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனுர், பூண்டி, கிளாவரை ஆகியப் பகுதிகளில் புதன்கிழமை சுமார் அரைமணி நேரம் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்ததால் அப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.