கொடைக்கானலில் காற்றுடன் மழை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
By DIN | Published On : 26th April 2019 02:18 AM | Last Updated : 26th April 2019 02:18 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் வியாழக்கிழமை மாலை காற்றுடன் பெய்த மழையால், சுற்றுலா இடங்களைப் பார்வையிட முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந் நிலையில், வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை வெயில் நிலவியது. அதன்பின்னர், மாலையில் காற்றுடன் மழை பெய்தது. 30 நிமிடத்துக்கும் மேலாக பெய்த மழையால், குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
இந்த மழையால், சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். சிலர், மழையிலும் ஏரியில் படகு சவாரியும், ஏரி சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரியும் செய்து மகிழ்ந்தனர். நீரோடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.