கொடைக்கானலில் சாலைகள் சேதம்
By DIN | Published On : 26th April 2019 06:26 AM | Last Updated : 26th April 2019 06:26 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் சாலைகள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கொடைக்கானலில் அண்ணா சாலை, பாம்பார்புரம், முனியாண்டி கோயில் சாலை,பிரகாசபுரம் சாலை, டிப்போ பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. இதனால், இச்சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாமல் ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் வரத் தொடங்கியுள்ளன. எனவே, நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.