தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைப்பு: பொதுமக்கள் முற்றுகையால் பணிகள் நிறுத்தம்

குஜிலியம்பாறை அருகே செவ்வாய்க்கிழமை தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைப்பதாகக் கூறி சாலை

குஜிலியம்பாறை அருகே செவ்வாய்க்கிழமை தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைப்பதாகக் கூறி சாலை அமைக்கும் ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
    திண்டுக்கல் மாவட்டம் கேவிலூர் அருகே உள்ள ஆர்.கோம்பையிலிருந்து கரையானூர் வரையிலான 1.700 கி.மீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி ரூ.34 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது.
   இந்த பாதையை பாரதிநகர், அண்ணாவி நகர், தாதனூர், கரையானூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கரையானூரிலிருந்து கோம்பை நோக்கி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 500 மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அமமுக பிரமுகர் தர்மர் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு பணிகளை தடுத்து நிறுத்தினர். 
         இதையடுத்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் பாலு, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 
  அப்போது, தரமான சாலை அமைக்கப்படும் என்றும், அலுவலர்கள் முன்னிலையில் அந்த பணிகள் நடைபெறும் என்றும் உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com