தைப்பூசம் : திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஜன.21இல் உள்ளூர் விடுமுறை
By DIN | Published On : 04th January 2019 01:15 AM | Last Updated : 04th January 2019 01:15 AM | அ+அ அ- |

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஜன. 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்தி: பழனி தைப்பூசத் திருவிழா ஜன.21ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுவதையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள் மற்றும் சார்நிலை கருவூலங்கள், அவசர வேலைகளை கவனிப்பதற்காக குறைந்த அளவிலான பணியாளர்களுடன் செயல்படும்.
உள்ளுர் விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் பிப்.2ஆம் தேதி(சனிக்கிழமை), வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.