திண்டுக்கல்லில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை ரூ. 20 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் கோட்டை குளம் சாலையில் உள்ள காந்தி காய்கறி சந்தை அருகே வசித்து வருபவர் பழனியாண்டி. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இவரும் இவரது மனைவி ராஜலட்சுமியும் செவ்வாய்க்கிழமை காலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் மாடியில் உள்ள சமையலறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் பழனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.