ஆடு மேய்க்க சென்ற சிறுமி கிணற்றில் தவறி விழுந்து பலி
By DIN | Published On : 09th June 2019 02:50 AM | Last Updated : 09th June 2019 02:50 AM | அ+அ அ- |

எரியோடு அருகே ஆடு மேய்க்கச் சென்ற 13 வயது சிறுமி, சனிக்கிழமை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் அனுசியா(13). அதே பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை விடுமுறை என்பதால், அருகிலுள்ள பகுதிக்கு ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 2 சிறுமிகளும் சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள கிணற்றில் அனுசியா தவறி விழுந்துவிட்டாராம். இதனை அடுத்து உதவி கேட்டு உடன் சென்ற சிறுமிகள் கூச்சலிட்டுள்ளனர். அதன் மூலம் அக்கம் பக்கம் இருந்தவர்கள் கிணற்றுக்கு சென்று சிறுமி அனுசியாவை மீட்டபோது, அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து எரியோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.