ஆத்தூர் நீர்த்தேக்கத்தை சுற்றி தனியார் குடிநீர் நிறுவனங்கள்: 50 கிராமங்களில் விநியோகம் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தைச் சுற்றிலும் செயல்படும் குடிநீர் விற்பனை நிறுவனங்களால், நீர்மட்டம் மைனஸ் 5 அடிக்கு சென்றுள்ளது. இதனால், திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் 50-க்கும்


திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தைச் சுற்றிலும் செயல்படும் குடிநீர் விற்பனை நிறுவனங்களால், நீர்மட்டம் மைனஸ் 5 அடிக்கு சென்றுள்ளது. இதனால், திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 
 திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த ஆத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. அதனருகே உள்ள அக்கரைப்பட்டி ஊராட்சி பகுதியில் பன்னாட்டு நிறுவனம் உள்பட ஏராளமான குடிநீர் நிறுவனங்கள் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து குடிநீரை உறிஞ்சி வருகின்றன. தினசரி லட்சக்கணக்கான லிலிட்டர் தண்ணீர் எடுத்து சுத்திகரித்து ஒரு லிலிட்டர், 2 லிலிட்டர் பாட்டில்களில் நிரப்பி அவற்றை லாரிகளின் மூலம் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். 
இந்நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பு வரை ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மட்டம் மைனஸ் அளவிற்கு சென்றதில்லை. குடிநீர் விற்பனை நிறுவனங்கள் வந்த பின்பு ஆண்டுதோறும் கோடை காலங்களில் மைனஸ் ஒன்று முதல் ஐந்து அடி ஆழம் வரை தண்ணீர் சென்றுவிடுகிறது. ஆரம்பத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த பல அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி குடி தண்ணீர் நிலையம் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அக்கரைப்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஆத்தூர் ஒன்றிய அதிகாரிகள் அனுமதி வழங்கியதால், குடிநீர் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.  காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி மற்றும் சித்தையன்கோட்டை பேரூராட்சி, அக்கரைப்பட்டி, ஆத்தூர், சீவல்சரகு, வக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்ய அழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டவுடன் ஊராட்சிகளுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் கிராமங்களில் குடிதண்ணீர் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டு வருகிறது.  ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்திலும் தண்ணீர் மட்டம் மைனஸ் ஐந்து அடிக்கு சென்று விட்டது. இதனால் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் குடி தண்ணீர் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து ஆத்தூர், அக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியது: ஊராட்சிகளுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யும் ஆழ்துளை கிணறு அருகே குடிதண்ணீர் விற்பனை நிலையம் அமைக்க அனுமதி வழங்கியது தவறானது. அனுமதி வழங்கிய அக்கரைப்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நிறுவனத்தை தொடர்ந்து ஆத்தூர் ஊராட்சி பகுதிகளில் குடிதண்ணீர் விற்பனை செய்யும் நிலையங்கள் அதிகரித்து விட்டன. எனவே ஆத்தூர் மற்றும் அக்கரைப்பட்டி ஊரா ட்சி பகுதிகளில் செயல்படும் குடிநீர் விற்பனைநிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தற்காலிலிகமாக அந்த நிறுவனங்களை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com