சுடச்சுட

  

  திண்டுக்கல், வேடசந்தூர் சின்னக்காம்பட்டியில் ஜூன் 15 மின்தடை

  By DIN  |   Published on : 14th June 2019 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திண்டுக்கல் அங்குநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (ஜூன் 15) நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   இதன் காரணமாக திண்டுக்கல் நகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர்(திண்டுக்கல் மேற்கு) ச.ராமன்  தெரிவித்துள்ளார்.
  வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி சனிக்கிழமை (ஜூன் 15) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதன் காரணமாக வேடசந்தூர், நாகம்பட்டி, காளனம்பட்டி, நத்தப்பட்டி, தட்டாரப்பட்டி, சுள்ளெறும்பு, நவாலூத்து, பூவாய்பாளையம், பூத்தாம்பட்டி, குருநாதநாயக்கனூர், அம்மாபட்டி, மாரம்பாடி, முருநெல்லிக்கோட்டை, சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி தெரிவித்துள்ளார்.
  ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ஜூன் 15 ஆம் தேதி (சனிக்கிழமை) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதனால் சின்னக்காம்பட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை, கொ.கீரனூர், குத்திலுப்பை, சாமியாடிபுதூர், ஜ.வாடிப்பட்டி,நரசிங்கபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி, அண்ணாநகர், புல்லாக்கவுண்டனூர், நவக்கானி, சோளியப்பகவுண்டனூர், இ.அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, மாம்பாறை, அத்தப்பன்பட்டி,எல்லப்பட்டி, பாபைட்டி, இடையன்வலசு, பெருமாள்கவுண்டன்வலசு, இ.கல்லுப்பட்டி, கக்கரநாயக்கனூர், வலையபட்டி ஆகிய இடங்களில் சனிக்கிழமை 
  காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் பி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai