பழனி பங்குனி உத்திரத் திருவிழா: மார்ச் 15 இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
By DIN | Published On : 06th March 2019 07:36 AM | Last Updated : 06th March 2019 07:42 AM | அ+அ அ- |

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பழனி தண்டாயுதபாணி மலைக் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி உத்திரத் திருவிழா முக்கியமானதாகும். இவ்விழாவை முன்னிட்டு, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் விரதமிருந்து, கொடுமுடி தீர்த்தம் தரித்து பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர்.
இத்திருவிழா, மார்ச் 15 ஆம் தேதி பழனி திருஆவினன்குடி கோயிலில் காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகின்றன. மார்ச் 20 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு மேல் வெள்ளித் தேரில் சுவாமி கிரிவீதி உலாவும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருத்தேரோட்டம் மார்ச் 21 ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. மார்ச் 24 இல் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு, பழனி மலை கோயிலில் மார்ச் 19 முதல் 23 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு தங்கத் தேர் புறப்பாடு இருக்காது.
விழா ஏற்பாடுகளை, பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் கோயில் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.