வாய்க்காலில் தவறி விழுந்த கூலி தொழிலாளி சாவு
By DIN | Published On : 06th March 2019 07:35 AM | Last Updated : 06th March 2019 07:35 AM | அ+அ அ- |

பழனி அருகே வாய்க்காலில் தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
பழனியை அடுத்த காரமடை வையாபுரி கண்மாயிலிருந்து மறுகால் நீர்வடியும் வாய்க்கால் பகுதியில், திங்கள்கிழமை சடலம் மிதந்துள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சடலத்தை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பழனி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இறந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம்(50) என்றும், அவர் 2 நாள்களுக்கு முன் காணாமல்போய் உறவினர்களால் தேடப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர், வாய்க்கால் பகுதியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.