குடிநீர் கோரி அமைச்சர் வீடு முற்றுகை
By DIN | Published On : 28th March 2019 08:08 AM | Last Updated : 28th March 2019 08:08 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் குடிநீர் வழங்க கோரி வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் வீட்டை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 7ஆவது வார்டுக்குள்பட்ட சோலை இல்லம் தெருவில் 60க்கு மேற்பட்ட குடுபம்பங்கள் உள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், ஆர்எம்.காலனியிலுள்ள வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வீட்டை புதன்கிழமை முற்றுகையிட்டனர். அமைச்சர் வீட்டில் இல்லாததால், அவரது மகன் ராஜ்மோகன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாநகராட்சி அலுவலர்களிடம் பேசி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துவதாக உறுதி அளித்தார். இதனை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...