முன் விரோதத் தகராறு : ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
By DIN | Published On : 05th May 2019 01:26 AM | Last Updated : 05th May 2019 01:26 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் முன்விரோதத் தகராறில் ஆட்டோ ஓட்டுநருக்கு சனிக்கிழமை அரிவாள் வெட்டு விழுந்தது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் மணிகண்டன்(28). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்ற விக்னேஷ் (30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், மேட்டுப்பட்டிச் சாலையிலுள்ள மாநகராட்சி ஆடுவதை கூடம் அருகே மணிகண்டன் மற்றும் விஷ்ணு ஆகியோருக்கு இடையே சனிக்கிழமை மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த விஷ்ணு, மணிகண்டனை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், மணிகண்டனுக்கு கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் சிகிச்சைக்காக திருச்சி சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...