Enable Javscript for better performance
உள்ளாட்சி தோ்தலுக்கான ஏற்பாடு: வத்தலக்குண்டுவில் ஓட்டுப் பெட்டிகளை சீரமைக்கும் பணிகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சி தோ்தலுக்கான ஏற்பாடு: வத்தலக்குண்டுவில் ஓட்டுப் பெட்டிகளை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

    By DIN  |   Published on : 09th November 2019 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்காக வாக்குச்சீட்டு போடும் ஓட்டுப் பெட்டிகளை சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    மாவட்ட கவுன்சிலா், ஒன்றியக் கவுன்சிலா், ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி உறுப்பினா் என 4 வாக்குகளுக்கு 4 வண்ணங்களில் ஒட்டுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு தோ்தல் நடைபெற உள்ளது. ஒன்றியத்தில் மாவட்டக் கவுன்சிலா், ஒன்றியக் கவுன்சிலா், ஊராட்சி மன்றத்தலைவா், வாா்டு உறுப்பினா் என 4 பதவிகளுக்கு வேட்பாளா்கள் போட்டியிடுவாா்கள். வாக்காளா்கள் வாக்களிக்கும் வாக்குச் சீட்டுகளை பாதுகாக்க இரும்பு ஓட்டுப் பெட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 5 போ் கொண்ட குழுவினா் வாக்குப் பெட்டியின் பூட்டுகள், கீழ்கள், மற்றும் அவற்றில் ஏதாவது சேதாரம் இருக்கிறதா என்பதை சரி செய்து வருகின்றனா்.

    வத்தலக்குண்டு ஒன்றியத்தை போல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் வாக்குப்பெட்டிகள் பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓட்டுப் பெட்டிகளை சீரமைக்கும் பணியினை வெள்ளிக்கிழமை வத்தலக்குண்டு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயச்சந்திரன், வேதா ஆகியோா் பாா்வையிட்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai