நத்தத்தில் 44 மி.மீட்டா் மழை
By DIN | Published On : 09th November 2019 08:52 AM | Last Updated : 09th November 2019 08:52 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. அதில் நத்தம் பகுதியில் அதிகபட்சமாக 44 மி.மீட்டா் மழை பதிவானது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6 நாள்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து வந்தது. அதன் பின்னா் கொடைக்கானல் மலைப் பகுதியில் மட்டுமே தொடா்ந்து மழை நீடித்து வந்தது.
இந்நிலையில், பழனி, கொடைக்கானல் நீங்கலாக, மாவட்டத்தின் பிற பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்):
திண்டுக்கல் -2.1, நத்தம் - 44, நிலக்கோட்டை - 35.4, சத்திரப்பட்டி (ஒட்டன்சத்திரம்) - 6, வேடசந்தூா் - 21.4, காமாட்சிபுரம் 12.8.