திண்டுக்கல்லில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 11th September 2019 07:53 AM | Last Updated : 11th September 2019 07:53 AM | அ+அ அ- |

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில ராமாணீ பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்யக் கோரி திண்டுக்கல் மாவட்ட வழக்குரைஞர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி தஹில ராமாணீ மேகாலய உயர்நீதிமன்றத்திற்கு கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை அடுத்து, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனிடையே, அவரது பணியிட மாறுதல் உத்தரவை திரும்ப பெறக் கோரி தமிழகம் முழுவதும் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு வழக்குரைஞர் சங்கத் தலைவர் வி.கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், 30-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு நீதிபதி தஹில ராமாணீக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.