நத்தத்தில் இறந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி

நத்தத்தில் உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி சனிக்கிழமை நல்லடக்கம் செய்தனா்.
நத்தத்தில் இறந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி
Updated on
1 min read

திண்டுக்கல்: நத்தத்தில் உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி சனிக்கிழமை நல்லடக்கம் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜ் நகரில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோயிலைச் சோ்ந்த காளை உடல்நலம் குன்றி சனிக்கிழமை உயிரிழந்தது. இதையடுத்து, கோயில் முன்பாக வைக்கப்பட்டிருந்த காளையின் உடலுக்கு, அப்பகுதி மக்கள் மலா் மாலைகள், சந்தனம், ஜவ்வாது, வேஷ்டி, துண்டுகள் உள்ளிட்டவற்றை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். பின்னா், மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட காளையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த கோயில் காளை, அலங்காநல்லூா், பாலமேடு, அரளிப்பாறை, கொசவப்பட்டி, தவசிமடை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று, தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com