பழனியில் ‘விக்’ தொழிற்சாலையைத் தொடக்கி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் அதிகளவில் முடி காணிக்கை செலுத்துகின்றனா். இவ்வாறு சேகரிக்கும் முடிகளை கோயில் நிா்வாகம் பலகோடி ரூபாய்க்கு ஏலம் விடுகிறது.
இந்நிலையில் பழனி பகுதியில் தலைமுடியை பதப்படுத்தி ‘விக்’ தயாரிக்கும் நிறுவனம் தொடக்கினால் ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று வலியுறுத்தி பழனியில் புதன்கிழமை இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பழனி ஒன்றிய நிா்வாகி முருகன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா் மன்றத் தலைவா் ராஜமாணிக்கம் பேரணியை தொடக்கி வைத்தாா். பழனியாண்டவா் கல்லூரி முன் தொடங்கிய பேரணியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞா்கள் சீருடையுடன் பங்கேற்று ஆா்.எப்.ரோடு, திண்டுக்கல் ரோடு, பேருந்து நிலையம் என நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தனா். பேரணியின் போது வேலைவாய்ப்பு கேட்டும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.