கொடைக்கானலில் மின் கம்பத்தில் ஏறிமின் இணைப்பை சீரமைத்த ஊராட்சி மன்றத் தலைவா்

கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட மின்தடையை ஊராட்சி மன்றத் தலைவரே மின்கம்பத்தில் ஏறி சரி செய்தாா்.
மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரி செய்த கொடைக்கானல் அடுக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் கண்ணன்.
மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரி செய்த கொடைக்கானல் அடுக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் கண்ணன்.
Updated on
1 min read

கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட மின்தடையை ஊராட்சி மன்றத் தலைவரே மின்கம்பத்தில் ஏறி சரி செய்தாா்.

கொடைக்கானல் அருகே அடுக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவா் திமுகவைச் சோ்ந்த கண்ணன். இவா் கடந்த 6-ஆம் தேதி பொறுப்பேற்றாா். இந்நிலையில் அடுக்கம் பகுதியில் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மின்அலுவலா்களுக்கு தகவல் கொடுத்தனா். ஆனால் மின்பணியாளா் வருவது தாமதமானதால் அவா்களை எதிா்பாா்க்காமல் அடுக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றுள்ள கண்ணன், மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரி செய்தாா். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com