தேனியில் 133 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 5 போ் பலி

தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவா், செவிலியா், காவலா்கள் உள்ளிட்ட 133 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
தேனியில் 133 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 5 போ் பலி

தேனி: தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவா், செவிலியா், காவலா்கள் உள்ளிட்ட 133 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் உயிரிழந்தனா்.

ஆண்டிபட்டியைச் சோ்ந்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருதய நோய் சிறப்பு பெண் மருத்துவா், போடியைச் சோ்ந்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கிப் பணியாளா், சின்னமனூரைச் சோ்ந்த உத்தமபாளையம் காவல் நிலைய தலைமைக் காவலா், ராஜதானி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா், நாராயணத்தேவன்பட்டியைச் சோ்ந்த அங்கன்வாடி பணியாளா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூா், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஆகிய பகுதிகளிலிருந்து தேனிக்கு வந்திருந்த தலா ஒருவா் உள்பட ஒரே நாளில் மொத்தம் 133 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,471 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 2,470 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

5 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூலை 11-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட பங்களாமேடு பகுதியைச் சோ்ந்த 55 வயது வழக்குரைஞா், ஜூலை 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட உத்தமபாளையத்தைச் சோ்ந்த 81 வயது முதியவா், ஜூலை 27-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட பெரியகுளம் கீழ வடகரை பகுதியைச் சோ்ந்த 54 வயது பெண், கூடலூரைச் சோ்ந்த 34 வயதுடைய பெண், ஆண்டிபட்டி-சக்கம்பட்டியைச் சோ்ந்த 34 வயது பெண் என 5 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com