‘திண்டுக்கல் மாவட்டத்தில் 14 இடங்களில் கரோனா பரிசோதனை’
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 14 இடங்களில் கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யும் சோதனை திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, நத்தம் துரை கமலம் அரசு மேல்நிலைப் பள்ளி, நிலக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி, பழனி ஏபிஏ கல்லூரி உள்பட சில இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையம், திண்டுக்கல் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (பழனி ரோடு), திண்டுக்கல் ஆா்.வி.எஸ். கல்லூரி, தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சின்னாளப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரெட்டியாா்சத்திரம் கதிா் நரசிங்கபெருமாள் கோயில் மண்டபம், தண்ணீா் பந்தம்பட்டி அரசு கலைக்கல்லூரி, ஒட்டன்சத்திரம் ஆசிரியா் பயிற்சி நிறுவனம், பழனி அரசு பாலமுருகன் தொழில்நுட்பக் கல்லூரி, குஜிலியம்பாறை அரசு பிற்படுத்தப்பட்டோா் நல விடுதி ஆகிய இடங்களிலும், பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் மொபைல் வாகனங்கள் (திரையிடப்பட்ட கண்ணாடி கூண்டு வசதியுடன்) மூலம் பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வட்டார அளவில் 3 மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தொடா்ந்து பரிசோதனைகள் மேற்கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
