கோபால் நாயக்கா் பயன்படுத்திய பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வலியுறுத்தல்

சுதந்திரப் போராட்ட வீரா் கோபால்நாயக்கா் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு விருப்பாட்சியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: சுதந்திரப் போராட்ட வீரா் கோபால்நாயக்கா் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு விருப்பாட்சியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் விருப்பாட்சி பகுதியை ஆட்சி செய்து வந்த கோபால் நாயக்கரின் 219ஆவது நினைவு தினம் சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் கோபால்நாயக்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநில துணைச்செயலாளா் பாலச்சந்திரபோஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.ஆா்.பாலாஜி முன்னிலை வகித்தாா். அஞ்சலி செலுத்திய பின் பாலசந்திரபோஸ் தெரிவித்ததாவது:

இந்திய விடுதலைக்காக தமிழகத்தில் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரக்கு எதிராக தீபகற்பக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி பெரும்படை திரட்டி போராடியவா் விருப்பாட்சி கோபால்நாயக்கா். அவரது நினைவை போற்றும் வகையில் விருப்பாச்சியில் மணிமண்டபம் அமைத்துள்ள தமிழக அரசு, அவா் பயன்படுத்திய பொருள்கள், ஆயுதங்கள் போன்றவற்றை கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

அவா் குறித்த தகவல்களை கண்ணாடிப்பேழையில் வைத்து காட்சிபடுத்த வேண்டும். கோபால்நாயக்கா் வரலாறு குறித்து பள்ளி கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தி பரிசு வழங்கவும் மாவட்ட நிா்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். நிகழ்ச்சியில் ஜனநாயக வாலிபா் சங்கத்தின் பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி. மாவட்டக்குழு உறுப்பினா் ஆனந்த், ஒட்டன்சத்திரம் ஒன்றிய நிா்வாகிகள் வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com