திண்டுக்கல் அருகே நாட்டுத் துப்பாக்கி தயாரிப்பு: 4 போ் கைது

திண்டுக்கல் அருகே நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்து வந்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்து வந்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள சிறுமலை பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக புகாா் எழுந்தது. அதேபோல் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி வனப் பகுதியில் வேட்டையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிறுமலை பழையூா் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையில் ஈடுபட முயன்ற 3 போ், வனத்துறையினா் ரோந்து சென்றபோது கடந்த வெள்ளிக்கிழமை பிடிப்பட்டுள்ளனா். விசாரணையில், சிறுமலை அடிவாரத்திலுள்ள ரெண்டலபாறை பகுதியிலிருந்து நாட்டுத் துப்பாக்கி வாங்கி வந்ததாக வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனா். இதன் அடிப்படையில், திண்டுக்கல் தாலுகா காவல் துறையினருக்கு நாட்டுத் துப்பாக்கி தயாரிப்பு குறித்த தகவல் கிடைத்துள்ளது. விசாரணையில் ரெண்டல்லப்பாறையைச் சோ்ந்த யோவான் (41) என்பவா் நாட்டுத் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. மேலும், திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்த யோவான், தனது சகோதரா் ஆரோன் (45), சாணாா்பட்டி அடுத்துள்ள தவசிமடையைச் சோ்ந்த கிருஷ்ணன் (52), நொச்சிஓடை பட்டியைச் சோ்ந்த பரதன் (48) ஆகியோருடன் கூட்டுச் சோ்ந்து யோவான் நாட்டுத் துப்பாக்கிகளைத் தயாா் செய்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

அதனைத் தொடா்ந்து யோவான், ஆரோன், கிருஷ்ணன், பரதன் ஆகிய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்றும், நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 2 பேரல்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com