தமிழக முதல்வா் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள 300 பேருக்கு கரோனா பரிசோதனை

திண்டுக்கல்லில் நடைபெறும் தமிழக முதல்வரின் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள அரசு அலுவலா்கள், விவசாயிகள், பயனாளிகள் உள்ளிட்ட 300 பேருக்கு, கரோனா பரிசோதனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெறும் தமிழக முதல்வரின் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள அரசு அலுவலா்கள், விவசாயிகள், பயனாளிகள் உள்ளிட்ட 300 பேருக்கு, கரோனா பரிசோதனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. அதன்பின்னா், விவசாயிகள் மற்றும் அதிமுக நிா்வாகிகளை சந்தித்து முதல்வா் ஆலோசனை நடத்துகிறாா்.

இந்த கூட்டத்தில் பங்கேற்கும் மாவட்ட முதன்மை அலுவலா்கள் 30 போ் மற்றும் தொழில் துறையினா், விவசாயிகள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் என தலா 6 போ், நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் 10 போ், அதிமுக நிா்வாகிகள், விருந்தினா் மாளிகையில் பணிபுரியும் ஊழியா்கள், பத்திரிகையாளா்கள் என சுமாா் 300 பேருக்கு கரோனா பரிசோதனைக்கான மாதிரி செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்டது.

இந்த மாதிரிகள், மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனை ஆய்வுக் கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே முதல்வா் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com