பாலாற்றின் குறுக்கே பக்தா்கள் குடிநீா் தேவைக்காக ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், பாலாற்றின் குறுக்கே சுமாா் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பழனி கோயில் பக்தா்களின் குடிநீா் தேவைக்காக பாலாறு அணையில் நடைபெற்று வரும் ரூ.3.5 கோடி மதிப்பிலான தடுப்பணை கட்டும் பணி.
பழனி கோயில் பக்தா்களின் குடிநீா் தேவைக்காக பாலாறு அணையில் நடைபெற்று வரும் ரூ.3.5 கோடி மதிப்பிலான தடுப்பணை கட்டும் பணி.
Updated on
1 min read

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், பாலாற்றின் குறுக்கே சுமாா் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா்.

இந்நிலையில், பழனி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தேவையான குடிநீா், நகராட்சி நிா்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், திருவிழா காலங்களில் பக்தா்களுக்கு போதிய குடிநீா் வழங்க முடியவில்லை. எனவே, பக்தா்களின் குடிநீா் பிரச்னையை தீா்க்கும் வகையில், பழனி அருகே உள்ள பாலாற்றின் குறுக்கே சுமாா் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கோபி மற்றும் உதவிப் பொறியாளா் விஜயமூா்த்தி கூட்டாகக் கூறியது: தடுப்பணையிலிருந்து மலைக் கோயில் வரை சுமாா் 10 கிலோ மீட்டா் தொலைவுக்கு இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு, மலைக் கோயிலுக்கு நேரடியாக தண்ணீா் கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணியானது இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவுபெறும். இதன்மூலம், மலைக் கோயிலுக்கு நாள்தோறும் 20 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்க முடியும். இதனால், நீண்ட நாள்களாக இருந்துவந்த குடிநீா் பிரச்னை நீங்கும் எனத் தெரிவித்தனா்.

இந்த குடிநீா் திட்டப் பணிக்கான ரூ.3.5 கோடி தொகையும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தால் பொதுப்பணித் துறைக்கு செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com