வடமதுரை அருகே சாலை தடுப்பில் சரக்கு வேன் மோதல்: தம்பதி பலி
By DIN | Published On : 01st December 2020 05:04 AM | Last Updated : 01st December 2020 05:04 AM | அ+அ அ- |

வடமதுரை அருகே திங்கள்கிழமை சாலையின் மைய தடுப்புச் சுவரில் சரக்கு வேன் மோதி நிகழ்ந்த விபத்தில் தம்பதி உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூா் அடுத்துள்ள பழைய சித்துவாா்பட்டியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (42). இவரது மனைவி சண்முகப் பிரியா (37). இருவரும் வடமதுரை ரயில் நிலைய சாலையில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தனா். இந்நிலையில், பால்ராஜ் தனது மனைவியை அழைத்துக் கொண்டு சரக்கு வேனில் திண்டுக்கல் நோக்கி திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தாா்.
திருச்சி - திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் வடமதுரை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது சாலையின் மையத்திலுள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்த பால்ராஜ் மற்றும் சண்முகப் பிரியா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...