முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது தாக்குதல்: தந்தை, மகன்கள் மீது வழக்கு
By DIN | Published On : 01st December 2020 10:48 PM | Last Updated : 01st December 2020 10:48 PM | அ+அ அ- |

வடமதுரை அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன்கள் உள்பட 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்துள்ள கொம்பேறிப்பட்டி மம்மானியூரைச் சோ்ந்தவா் மூக்கையா. இவா், கொம்பேறிப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்தவா்.
இந்நிலையில் மம்மானியூரிலிருந்து வடக்கு அரசபுரம் வரை தாா்ச்சாலை அமைப்பது தொடா்பாக கிராம மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ஊா் மக்கள் அனைவரும் தாா்ச்சாலை அமைக்க ஆதரவு தெரிவித்த நிலையில், வெள்ளைச்சாமி என்பவரின் குடும்பத்தினா் மட்டும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதனை மூக்கையா கண்டித்தாராம்.
இதனால் வெள்ளைச்சாமி, அவரது மகன்களுடன் சோ்ந்து தன்னை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக மூக்கையா, வடமதுரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வெள்ளைச்சாமி, அவரது மகன்கள் அரசன், வகுரன் ஆகியோா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...