பழனியில் வீடு, கடைகளில் திருட்டு
By DIN | Published On : 05th December 2020 09:43 PM | Last Updated : 05th December 2020 09:43 PM | அ+அ அ- |

பழனி: பழனியில் வெள்ளிக்கிழமை வீடு மற்றும் கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் பணம், நகை மற்றும் பொருள்களைத் திருடிச் சென்றுவிட்டனா்.
பழனி ரயில்வே காலனியில் வசிப்பவா் சத்யராசு. இவா் கோதைமங்கலம் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருகிறாா். வெள்ளிக்கிழமை காலை பணிக்குச் சென்ற சத்யராசு மதியம் சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 4 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
பழனி அருகே சண்முகநதி சாலையில், செந்தூா் முருகன் வெல்டிங் ஒா்க் ஷாப் உள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்த கடையின் பூட்டை, மா்ம நபா்கள் உடைத்து வெல்டிங், கட்டிங், ரில்டிங் இயந்திரங்கள் மற்றும் பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் குறித்தும், பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.