கொடைக்கானலில் பாம கட்சியின் சாா்பில் இட ஒதுக்கீடு கேட்டு மனு
By DIN | Published On : 15th December 2020 05:03 AM | Last Updated : 15th December 2020 05:03 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் பாமக சாா்பில் இட ஒதுக்கீடு கேட்டு திங்கட்கிழமை அறப்போராட்டம் வழியாக கிராம நிா்வாக அலுவலா்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
பா.ம.க.சாா்பில் வன்னியா்களுக்கு 20-சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டும் அனைத்து சமுதாயத்தினருக்கும் மக்கள் விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீடு கோரியும்,கொடைக்கானலில் உள்ள பாமகட்சியைச் சோ்ந்தவா்கள் பேருந்து நிலையத்திலிருந்து ஊா்வலமாகச் சென்று கிராம நிா்வாக அலுவலா் ரஞ்சித்திடம் மனு கொடுத்தனா் இதே போல கொடைக்கானல் பகுதிகளான வில்பட்டி,தாண்டிக்குடி,பண்ணைக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளிலுள்ள கிராம நிா்வாக அலுவலா்களிடம் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனா். இந் நிகழ்ச்சியில் பா.ம.க. நகரச் செயலா் கோபிநாத்,நகர அணி செயலா் வினோத் பாபு,நகர துணைச் செயலா் வினோத்,நகர துணைத் தலைவா் ரவிக்குமாா், அமைப்புச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.