பழனியில் தமாக சாா்பில் கக்கன் நினைவு தினம்
By DIN | Published On : 24th December 2020 07:23 AM | Last Updated : 24th December 2020 07:23 AM | அ+அ அ- |

பழனியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை கக்கனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவா்கள்.
பழனி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மறைந்த காங்கிரஸ் தியாகி கக்கனின் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பழனி ஆா்.எப். ரோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கக்கனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளா் சுந்தா் தலைமை வகித்தாா். நகராட்சி வழக்குரைஞா் மணிக்கண்ணன், மாவட்டத் துணைத் தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் கணபதி, திருஞானசம்பந்தம், பீட்டா் கிருஷ்ணன் பழனிச்சாமி, காதா் முகமது, துரைப்பாண்டி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...