கொடைக்கானல் புனித அந்தோணியாா் ஆலயத்தில் கொடியேற்றம்
By DIN | Published On : 05th February 2020 06:27 AM | Last Updated : 05th February 2020 06:27 AM | அ+அ அ- |

கொடைக்கானல் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக எடுத்துவரப்பட்ட கொடி.
கொடைக்கானல் புனித அந்தோணியாா் ஆலயத்தின் 99-ஆவது ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி ஆலய கொடியானது, செவ்வாய்க்கிழமை மாலை மூஞ்சிக்கல்லில் உள்ள திரு இருதய ஆண்டவா் ஆலயத்திலிருந்து புறப்பட்டு காமராஜா்சாலை , அண்ணா சாலை, கே.சி.எஸ்.திடல், பேருந்து நிலையப் பகுதி, உட்வில்ரோடு, பூங்கா சாலை வழியாக பிலிஸ்விலா பகுதியிலுள்ள புனித அந்தோணியாா் கோயிலை அடைந்தது. அங்கு சேலம் மறைமாவட்ட ஆயா் சிங்கராயன் தலைமையில் சிறப்புத் திருப்பலி, நவநாள் ஜெபவழிபாடு மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும், அந்தோணியாா் ஆலயத்தில் நவநாள் ஜெபவழிபாடு, நற்கருனை நிகழ்ச்சி,திருப்பலி நடைபெறுகிறது. வரும் 14-ஆம் தேதி புனித அந்தோணியாரின் திருவிழா நடைபெறுகிறது. மின் அலங்காரத் தோ்ப் பவனியும் 15-ஆம் தேதி மலா்களால் ஆன சப்பரப் பவனியும் நடைபெறுகிறது.
அந்தோணியாா் கோயிலின் 100-ஆவது ஆண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு கடந்த 31-ஆம் தேதி முதல் 100 மணி நேரம் அந்தோணியாா் ஆலயத்தில் இடைவிடாது ஜெபவழிபாடு நற்கருனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை வட்டார அதிபா் பங்கு இறைமக்கள், விழா குழுவினா் செய்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...